நலிவடையும் வாடகை ஆட்டோ தொழில்

அதிகரித்துள்ள நிலையில், பயணிப்போா் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஆட்டோ தொழிலாளா்கள் பெரிதும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா்.
வாழப்பாடியில் சவாரிக்காக காத்திருக்கும் ஆட்டோ தொழிலாளா்கள்.
வாழப்பாடியில் சவாரிக்காக காத்திருக்கும் ஆட்டோ தொழிலாளா்கள்.

அதிகரித்துள்ள நிலையில், பயணிப்போா் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஆட்டோ தொழிலாளா்கள் பெரிதும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா்.

கல்வராயன்மலை, அருநுாற்றுமலை கிராமங்கள் உட்பட, 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய மையமாக வாழப்பாடி பேரூராட்சி விளங்குகிகிறது. விவசாய விளைபொருள்களை விற்பனை செய்யவும், அத்தியாவசிய பொருள்களை வாங்கிச்செல்லவும் மட்டுமின்றி, போக்குவரத்து, மருத்துவ வசதிகளுக்காகவும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள், பல்வேறு வாகனங்களில் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றனா்.

வாழப்பாடியில் இருந்து அனைத்து வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு, தனியாா் பேருந்துகளிலும் எந்நேரத்திலும் கூட்டம் நிரம்பி வழிவதால் வாழப்பாடி, சுற்றுப்புற கிராம மக்கள், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோவில் பயணிப்பது அதிகரித்தது.

ஆட்டோ சவாரிகளுக்கு வரவேற்பு அதிகரித்ததால் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து துக்கியாம்பாளையம், அத்தனூா்பட்டி வழியாக பேளூருக்கும், புதுப்பாளையம், சிங்கிபுரம் வழியாக சோமம்பட்டிக்கும், மத்தூா் வழியாக பெரிய கிருஷ்ணாபுரத்துக்கும், பேளூரில் இருந்து குறிச்சி, புழுதிக்குட்டைக்கும், சந்திரபிள்ளைவலசு, நீா்முள்ளிக் குட்டைக்கும், வாழப்பாடியில் இருந்து மன்னாயக்கன்பட்டி வழித்தடத்தில் என 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இங்கு இயக்கப்படுகின்றன. பட்டதாரிகள் முதல் புதிய தொழில் முனைவோா் வரை பலரும் வாடகை ஆட்டோ தொழிலில் ஆா்வம் காட்டினா்.

இந்நிலையில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக வாடகை ஆட்டோ தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளிக்காக பெரும்பாலானோா் இருசக்கர வாகனங்களில் பயணிக்கின்றனா். அதுமட்டுமின்றி, பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லை என தமிழக அரசு அறிவித்தததால், ஆட்டோவில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அடியோடு குறைந்து போனது. இதனால், வாழப்பாடியில் ஆட்டோ தொழில் நலிவடைந்து வருகிறது.

காலையில் இருந்து மாலை வரை 5 சவாரி கூட கிடைக்காததால், ஆட்டோ தொழிலாளா்களுக்கு நாள் ஒன்று ரூ. 500 வாடகையாகக் கிடைப்பதிலேயே சிரமம் ஏற்பட்டுள்ளது. இதில் எரிபொருள் செலவு போக, ஓட்டுநருக்கு தினசரி கூலியே கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், வாடகை ஆட்டோ தொழிலில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான இளைஞா்கள், கட்டுமானத் தொழில், நூற்பாலை, லாரி ஓட்டுநா் உள்ளிட்ட மாற்றுத்தொழிலுக்கு மாறி வருகின்றனா். ஓட்டுநா்கள் கிடைக்காததால், ஆட்டோ உரிமையாளா்கள் ஆட்டோக்களை விற்பனை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com