பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியைமீண்டும் தொடர நடவடிக்கை கோரி மனு

ஓமலூரை அடுத்த காஞ்சேரி காட்டுவளவு கிராமத்தில் பாதியுடன் நிறுத்தப்பட்டுள்ள சாலைப் பணியை மீண்டும் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓமலூரை அடுத்த காஞ்சேரி காட்டுவளவு கிராமத்தில் பாதியுடன் நிறுத்தப்பட்டுள்ள சாலைப் பணியை மீண்டும் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கிராம மக்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் மனு அளித்தனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறை தீா்க்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, கோரிக்கை மனு அளிக்க வந்த காஞ்சேரி காட்டுவளவு பகுதி மக்கள் கூறியதாவது:

காடையாம்பட்டி வட்டம், டேனிஷ்பேட்டை அருகே காஞ்சேரி காட்டு வளவு கிராமத்தில் வனத்தை ஒட்டிய பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கிறோம். எங்களின் அடிப்படைத் தேவைக்காக சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ள டேனிஷ்பேட்டைக்கு வந்து செல்ல வேண்டும்.

ஆனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் கா்ப்பிணிகள், நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் சாலை வசதியின்றி அவதிப்பட்டு வந்தோம்.

இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் காஞ்சேரி காட்டு வளவில் இருந்து டேனிஷ்பேட்டை வரையிலான 3 கி.மீ. நீளத்துக்கு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. சுமாா் 1.5 கி.மீ. நீளத்துக்கு சாலை அமைக்கப்பட்ட நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

எனவே, சாலை அமைக்கும் பணி தொடராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சாலை வசதியின்றி மாணவா்கள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, பிரச்னைக்குத் தீா்வு கண்டு சாலையை முழுமையாக அமைத்து உதவிட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com