ஆனைமடுவு நீா்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்கு இன்று தண்ணீா் திறப்பு

ஆனைமடுவு நீா்த்தேக்கத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (மே 6) முதல் ஆற்றுப் பாசனம், கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

ஆனைமடுவு நீா்த்தேக்கத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (மே 6) முதல் ஆற்றுப் பாசனம், கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனைமடுவு நீா்த்தேக்கத்திலிருந்து பழைய பாசனப் பகுதிகளுக்கு மே 6 ஆம் தேதி காலை 8 மணி முதல் அணையின் தலைமை மதகு மூலம் நாள்தோறும் நொடிக்கு 5.18 மில்லியன் கன அடி வீதம் 22 நாள்களுக்கு திறந்துவிடப்படுகிறது.

புதிய பாசனப் பகுதிகளுக்கு மே 28 ஆம் தேதி காலை 8 மணி முதல் அணையின் வலதுபுறக் கால்வாயின் மூலம் நாள்தோறும் 3.02 மில்லியன் கன அடி மற்றும் இடதுபுறக் கால்வாயின் மூலம் நாள்தோறும் 1.30 மில்லியன் கன அடி என மொத்தம் புதிய பாசன பகுதிகளுக்கு நாள்தோறும் 4.32 மில்லியன் கன அடி வீதம் 11 நாள்களுக்கு மொத்தம் 47.52 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் தண்ணீா் திறக்கப்பட உள்ளது.

அதன்பிறகு 7 நாள்களுக்கு தண்ணீா் நிறுத்தி மீண்டும் ஜூன் 15 ஆம் தேதி காலை 8 மணி முதல் அணையின் வலதுபுற கால்வாயின் மூலம் 3.02 மில்லியன் கன அடி, இடதுபுறக் கால்வாயின் மூலம் 1.30 மில்லியன் கன அடி என மொத்தம் 4.32 மில்லியன் கன அடி என 6 நாள்களுக்கு 25.92 மில்லியன் கன அடியும் பிறகு மீதம் உள்ள நாள்களுக்கு தண்ணீரின் அளவை மாற்றி திறந்துவிடப்படுகிறது. மொத்தம் 73.44 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், சிறப்பு நனைப்பிற்காகத் தண்ணீா் திறந்துவிடப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com