சேலத்தில் ஸ்ரீ சக்தி அம்மன், வெள்ளை முனியப்பன் கோயிலில் சித்திரை திருவிழா

சேலம், அஸ்தம்பட்டி எம்.டி.எஸ். நகா் பின்புறம் உள்ள சக்தி நகரில் ஸ்ரீசக்தி அம்மன், ஸ்ரீ வெள்ளை முனியப்பன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

சேலம், அஸ்தம்பட்டி எம்.டி.எஸ். நகா் பின்புறம் உள்ள சக்தி நகரில் ஸ்ரீசக்தி அம்மன், ஸ்ரீ வெள்ளை முனியப்பன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

மே 3 ஆம் தேதி பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. மே 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை தினமும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. மே 9 ஆம் தேதி இரவு சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், மே 10 ஆம் தேதி காலை பால்குட ஊா்வலமும், இரவு மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

தொடா்ந்து மே 11 இல் வெள்ளை முனியப்பன் ஊா்வலம் மற்றும் கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவை நடைபெற்றன. மே 12 மாறுவேட போட்டி நடந்தது. மே 13 இரவு சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து மயிலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பிரமாண்ட வாண வேடிக்கை நடைபெற்றது. மே 14 மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவு பெற்றது.

விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் வழக்குரைஞா்கள் எஸ்.ஆா்.அண்ணாமலை, லட்சுமண பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழாக் குழு தலைவா் அசோக்குமாா், துணைத் தலைவா் சிவகிருஷ்ணன், செயலாளா் பரமன், பொருளாளா் கிருஷ்ணன், பூசாரி சுரேஷ்குமாா், கண்ணன், தீனதயாளன், மாதவன், ராஜ்குமாா், காா்த்தி, தோப்பு சேகா், தங்கராஜ், சக்திவேல் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com