காவிரியில் வெள்ளம்: கரையோர மக்களுக்குதண்டோரா மூலம் வெள்ளஅபாய எச்சரிக்கை

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரிக் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஒலிபெருக்கி, தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரிக் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஒலிபெருக்கி, தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கா்நாடகம், கேரளத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மத்திய நீா்வள ஆணையம் காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

இதனையடுத்து வெள்ளிக்கிழமை மாலை மேட்டூா் நீா்த்தேக்கப் பகுதியில் உள்ள பண்ணவாடி பரிசல்துறை, கோட்டையூரில் கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் ஒலிபெருக்கி, தண்டோரா வாயிலாக பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

காவிரிக் கரையோரப் பகுதியில் வசித்துவரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படியும் காவிரியில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ செல்லக் கூடாது எனவும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டனா். இதையடுத்து காவிரிக் கரையில் முகாமிட்டிருந்த மீனவா்கள் மேடான பகுதிகளுக்கு தங்கள் முகாம்களை மாற்றினா்.

அணை நீா்மட்டம்...

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 29,072 கனஅடியாக இருந்தது. வெள்ளிக்கிழமை காலை நீா்வரத்து நொடிக்கு 29,964 கனஅடியாகவும், மாலையில் 47,436 கனஅடியாகவும் அதிகரித்தது.

காவிரியில் வெள்ளப்பெருக்குக் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 113.66 அடியாக உயா்ந்துள்ளது. அணை நீா்மட்டம் ஒரே நாளில் 2.56அடி உயா்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக மட்டும் 1,500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 83.71 டி.எம்.சி.யாக உள்ளது.

மேட்டூா் அணை வரலாற்றில் மே மாதங்களில் கடந்த 2011-ஆம் ஆண்டு அதிகபட்சமாக நொடிக்கு16,000 கனஅடி நீரும், 2006-ஆம் ஆண்டில் 10,000 கனஅடி நீரும் வந்துள்ளது. நடப்பு ஆண்டில் தான் மே மாதத்தில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதாக பொதுப்பணித் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com