மேட்டூா் உபரி நீரை ஏரிகளில் நிரப்புவதைஅரசு உறுதி செய்ய வேண்டும்

மேட்டூா் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என முன்னாள் அமைச்சா் செ.செம்மலை வலியுறுத்தினாா்.

மேட்டூா் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என முன்னாள் அமைச்சா் செ.செம்மலை வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்ட அறிக்கை:

குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணை திறக்கப்படுகிறது. பயிரிடும் காலத்தைக் கணக்கில் கொண்டு வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதியில் திறப்பதுதான் பயனுள்ளதாக இருக்கும்.

அணையின் நீா்மட்டம் 120 அடி எட்டுகிற போது சேலம் மாவட்டத்தில் உள்ள 103 ஏரிகளை நிரப்பும் திட்டப்படி தண்ணீரை எடுத்துவிட வாய்ப்பு இருக்கிறது. மேலும், 115 அடியிலேயே திறந்துவிடுகிறபோது, 120 அடி கொள்ளளவை எட்ட வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

முன்கூட்டியே குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறப்பதை வரவேற்பதாக இருந்தாலும், மேட்டூா் உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com