சேலம்: நிலவாரப்பட்டி அருகே ஜல்லிக்கட்டு விழா: 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

சேலம் நிலவாரப்பட்டி அருகே ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது: இந்த ஜல்லிக்கட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளனர்.
சேலம்: நிலவாரப்பட்டி அருகே ஜல்லிக்கட்டு விழா: 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

சேலம்: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு, சேலம், கூலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்தது.

இதைத்தொடர்ந்து சேலம், திருச்சி, கரூர் உள்ளிட்ட இடங்களில் கோயில் திருவிழாவை முன்னிட்டு அரசின் அனுமதியோடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டி கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதனடிப்படையில் நிலவாரப்பட்டி மூலக்காடு பகுதியில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர். இதனையடுத்து இன்று மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார்.

சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. சீறிப்பாயும் காளைகளை அடக்க 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 

வாடிவாசலில் இருந்து சீறிவரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். இதில் காளைகள் மிக எழுச்சியோடு மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் திமிறி சென்றது.

மேலும் மாடு பிடி வீரர்கள் சிலர் காளைகளை விடாமல் தங்களுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து பரிசுகளை அள்ளிச் சென்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கொளுத்தும் வெயிலையும் பாராமல் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்து வருகின்றனர்

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ தலைமையில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com