சேலம்: சாஸ்தா நகர் ஐயப்பன் ஆசிரமத்தில் மாலை அணிந்த பக்தர்கள்

சேலம் சாஸ்தா நகர் ஐயப்பன் ஆசிரமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் ஐயப்பனுக்கு மாலை அணிவித்து விரதம் தொடங்கினர்.
சேலம்: சாஸ்தா நகர் ஐயப்பன் ஆசிரமத்தில் மாலை அணிந்த பக்தர்கள்

சேலம்: சேலம் சாஸ்தா நகர் ஐயப்பன் ஆசிரமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் ஐயப்பனுக்கு மாலை அணிவித்து விரதம் தொடங்கினர்.

சேலம் குரங்கு சாவடி சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில் ஆண்டு முழுவதும் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கார்த்திகை முதல் நாளையொட்டி தை மாதம் வரை நாள்தோறும் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனை நடைபெறும். இதனால் கோவிலில் எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

இதன்படி கார்த்திகை முதல் நாளையொட்டி இன்று சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் சேலம் குரங்குசாவடி அருகில் உள்ள சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில் சபரிமலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் கோவில் குருசாமி முன்னிலையில் 500-க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதேபோல் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இருமுடி கட்டப்பட்டது.

இது குறித்து ஐயப்ப ஆசரம டிரஸ்ட் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஐயப்பன் ஆசிரமத்தில் நாள்தோறும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதோடு அன்னதானமும் வழங்கப்படுகிறது. கடந்த கரோனா தொற்றுக் காலத்தில் இரண்டு வருடங்களாக பொதுமக்களுக்கு தேவையான உணவுகளை சமைத்து வழங்கும் பணியில் இந்த சாஸ்தா நகர் ஐயப்பன் கோவில் சிறப்பாக பணியாற்றியது. அதற்காக அரசிடம் இருந்து நற்சான்றிதழ் பெற்றுள்ளது என்றார்.

தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் நாள்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சபரிமலைக்கு பாதயாத்திரை ஆக செல்லும் பக்தர்கள் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து தங்கி செல்வதாகவும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு வசதிகளை கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

பக்தர்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி கோவில் நிர்வாகம் செயல்பட நடவடிக்கை எடுத்து உள்ளது என்றும் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

அப்போது, ஸ்ரீ ஐயப்பா டிரஸ்ட் தலைவர் கேபிஎன் நடராஜன், பொருளாளர் சரவணன் பெருமாள், இணை செயலாளர் சீனிவாசன், சட்ட ஆலோசகர் ஐயப்ப மணி, உப தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com