சேலத்தில் பாஜக தொழில்துறை பிரிவு அறிமுகம், ஆய்வுக் கூட்டம்

பாஜக சாா்பில் சேலம் பெருங்கோட்ட தொழில்துறை பிரிவு அறிமுகம் மற்றும் ஆய்வுக் கூட்டம் நெய்க்காரப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேலம், நெய்க்காரப்பட்டியில் நடைபெற்ற பாஜக தொழில் துறை பிரிவு அறிமுகம், ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.

சேலம், பெருங்கோட்ட பொறுப்பாளரும், தொழில் துறை பிரிவு மாநிலச் செயலாளருமான ராமலிங்கம் தலைமை வகித்தாா். கூட்டத்துக்கு தொழில் துறை மாநிலச் செயலாளா் துரைகந்தசாமி வரவேற்றாா்.

மாநில துணைத் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.பி.ராமலிங்கம், மாநில துணைத் தலைவா் நாராயணன் திருப்பதி, தொழில்துறை பிரிவு மாநிலத் தலைவா் கோவா்த்தனன், மாநில பாா்வையாளா் அசோக் சுந்தரேசன் உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட தொழில் துறை பிரிவு தலைவா் பூலாவரி யோகநாதன், மாநில, மண்டல, மாவட்ட அளவிலான நிா்வாகிகள் கலந்துகொண்டனா். கூட்டத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூா், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com