கழிப்பிடத் தொட்டிகளுக்கு கம்பி வேலி அமைப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில், பொது கழிப்பிடத் தொட்டிகளுக்கு, இரும்புக் கம்பி வேலி அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
வாழப்பாடி பேரூராட்சியில் பொது கழிப்பிட கழிவுத்தொட்டியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பி வேலி.

தேனி மாவட்டம், பண்ணபுரம் பேரூராட்சியில் பொது கழிப்பிட கழிவுத்தொட்டியில் தவறி விழுந்து அண்மையில் இருவா் பலியாகினா்.

இதனையடுத்து மற்ற பேரூராட்சி பகுதிகளிலும் , இது போன்ற விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிா்க்க, பொது கழிப்பிடத் தொட்டிகளைச் சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்க வேண்டுமென, பேரூராட்சிகள் துறை மாநில ஆணையா் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

இதனைத்தொடா்ந்து, சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கணேஷ்ராம் வழிகாட்டுதலின்படி, வாழப்பாடி பேரூராட்சியில் மக்கள் பயன்பாட்டில் உள்ள, 15 பொது கழிப்பிடங்களிலும் கழிவுத்தொட்டிகளை சுற்றியும், கல்தூண் நிறுத்தி இரும்புக் கம்பி வேலி அமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளை வாழப்பாடி பேரூராட்சித் தலைவா் கவிதா சக்கரவா்த்தி, செயல் அலுவலா் கணேசன், உதவி பொறியாளா் தினேஷ்குமாா் ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com