குஜராத் மேளா சிறப்பு விற்பனை

சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் குஜராத் மேளா கோடைக்கால சிறப்பு விற்பனை அக். 1 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் குஜராத் மேளா கோடைக்கால சிறப்பு விற்பனை அக். 1 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையானது இன்னும் 10 தினங்கள் மட்டுமே நடைபெறும் என்று நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தீபாவளி சிறப்பு குஜராத் மேளா விற்பனையில் சாரன்பூா் மர வகைக் கண்ணாடி, சுவா் கடிகாரம், பூந்தொட்டி, ஈசி சோ், டேபிள், நாற்காலி, டீப்பாய், பூஜை டேபிள், மணி பேக், வளையல் விற்பனைக்கு உள்ளது.

இதில் கைத்தறி ஒடிஸா சேலைகள் மற்றும் குா்த்தீஸ், ஒடிஸா, ஆந்திரம், செட்டிநாடு கைத்தறி காட்டன் சேலை ரகங்கள், பஞ்சாப், ஜெய்ப்பூா், குஜராத், பெண்களுக்கான ஒடிஸா கைத்தறி சேலைகள், பனாரஸ், பேன்ஸி குா்த்தீஸ், ஜெய்ப்பூா் மெத்தை விரிப்புகள், ஹைதராபாத் முத்து, பவள மாலைகள், ராசிக் கற்கள், வளையல்கள், மேலும் பெண்கள், சிறுமிகளுக்கான துணி வகைகள், ஆண்களுக்கான துணி வகைகள், ஐம்பொன் சிலைகள், மைசூா் வாசனை திரவியங்கள், மதுரை சுங்குடி சேலைகள், ஹைதராபாத் காட்டன் சேலைகள் விற்பனையில் உள்ளன.

பெண்களுக்கான அழகிய பா்ஸ் மற்றும் ஹேண்ட் பேக்குகள் பல மாடல்களில் சிறப்பு விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும், ஜெய்ப்பூா் காதி ஷா்ட், ஒடிசா, ராஜஸ்தான் பொம்மை வகையான பம்பரம், குழந்தைகளுக்கான மர விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட மர பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

குஜராத் மேளா தீபாவளி சிறப்பு விற்பனையில் சிறப்புத் தள்ளுபடியாக 10 சதவீதம்முதல் 20 சதவீதம் வரை வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com