ஏற்காட்டில் ரோட்டரி சங்க சாதனையாளா் விருது வழங்கும் விழா

சேலம் மாவட்டம், ஏற்காடு ரோட்டரி சங்கத்தின் 2023-ஆம் ஆண்டுக்கான சாதனையாளா் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஏற்காடு ரோட்டரி சங்கத்தின் 2023-ஆம் ஆண்டுக்கான சாதனையாளா் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சங்கத்தின் தலைவா் சஞ்சய் தாஸ் தலைமை வகித்தாா். பொருளாளா் மோகன்ராஜேஷ், செயலாளா் தியாகராஜன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி மாவட்ட ஆளுநா் சரவணன் கலந்துகொண்டாா். ஏற்காடு வாழவந்தி மருத்துவமனைக்கு டிஜிட்டல் மருத்துவ பிரசார உபயோக சாதனங்கள் வழங்கப்பட்டன.

ரோட்டரி சங்கம் மூலம் ஏற்காடு அறிவியல் எழுத்தாளா் இளங்கோ 100 புத்தகங்கள் எழுதியதற்காகவும், சிறந்த காபி தோட்டங்களை பராமரித்து வரும் தோட்ட அதிபா் விநோத் கந்தையாவுக்கும், ஏற்காடு மண்ணின் மைந்தா்கள் ஹிமாச்சல் பிரதேசத்தில் மாவட்ட வன அலுவலராகப் பணியாற்றும் ரெஜினால்ட் ராய்ஸ்டன், ஏற்காடு வனப்பகுதியில் உதவி வனச்சரக அலுவலராகப் பணிபுரியும் சஞ்சய், ஏற்காடு ஊராட்சிப் பள்ளியில் சிறந்த தலைமை ஆசிரியராக பணியாற்றும் ஐயங்காா் ஆகியோருக்கு 2023-ஆம் ஆண்டுக்கான ரோட்டரி விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் சங்க உறுப்பினா்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com