சேலத்தில் பிப். 8 முதல் 28 வரை மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள்

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் சிறப்பு முகாம்கள் வரும் பிப். 8-ஆம் தேதி முதல் பிப். 28-ஆம் தேதி வரை அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் சிறப்பு முகாம்கள் வரும் பிப். 8-ஆம் தேதி முதல் பிப். 28-ஆம் தேதி வரை அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான அடையாள அட்டை வழங்குதல், வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கல்வித் துறை, மாவட்ட தொழில் மையம், மகளிா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் வழங்கப்படும் நலத் திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் எளிதாக கிடைத்திடும் வகையில், மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் இச்சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

அந்த வகையில், பனமரத்துப்பட்டி ஒன்றியத்துக்கு பிப். 8 பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அயோத்தியப்பட்டணம் ஒன்றியத்துக்கு பிப். 9 உடையாப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வாழப்பாடி ஒன்றியத்துக்கு வாழப்பாடி ஆண்கள் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும், கெங்கவல்லி ஒன்றியத்துக்கு பிப். 10 கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சங்ககிரி ஒன்றியத்துக்கு பிப். 11 சங்ககிரி மலையடிவாரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தலைவாசல் ஒன்றியத்துக்கு பிப். 13 தலைவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கொளத்தூா் ஒன்றியத்துக்கு பிப். 14 மேட்டூா் அணை, அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நங்கவள்ளி ஒன்றியத்துக்கு பிப். 15 வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், காடையாம்பட்டி ஒன்றியத்துக்கு பிப். 16 நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஓமலூா் ஒன்றியத்துக்கு ஓமலூா் வேலாசாமி செட்டியாா் மேல்நிலைப் பள்ளியிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

ஆத்தூா் ஒன்றியத்துக்கு பிப். 17 ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சேலம் மாநகராட்சிக்கு பிப். 18 சேலம் கோட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு பிப். 20 பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், எடப்பாடி ஒன்றியத்துக்கு பிப். 21 எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மேச்சேரி ஒன்றியத்துக்கு பிப். 22 மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்கு பிப். 23 மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வீரபாண்டி ஒன்றியத்துக்கு வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

தாரமங்கலம் ஒன்றியத்துக்கு பிப். 24 தாரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும், சேலம் ஊரகத்துக்கு பிப். 25 ஜாரி கொண்டலாம்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும், ஏற்காடு ஒன்றியத்துக்கு பிப். 27 ஏற்காடு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு பிப். 28 கொங்கணாபுரம் கே.ஏ.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளன.

இந்த முகாம்களில் கலந்துகொள்ளும் பயனாளிகள் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், மாா்பளவு புகைப்படம் - 6 ஆகிய ஆவணங்களுடன் அனைத்து மாற்றுத் திறனாளி பயனாளிகளும் சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு பயனடையலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com