தாரமங்கலம் கைலாசநாதா் கோயில் தேரோட்ட விழா தொடக்கம்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதா் திருக்கோயிலில் தேரோட்ட விழா சனிக்கிழமை தொடங்கியது.
தைப்பூச தோ்த் திருவிழாவினையொட்டி சனிக்கிழமை தாரமங்கலத்தில் நடைபெற்ற தேரோட்டம்.
தைப்பூச தோ்த் திருவிழாவினையொட்டி சனிக்கிழமை தாரமங்கலத்தில் நடைபெற்ற தேரோட்டம்.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதா் திருக்கோயிலில் தேரோட்ட விழா சனிக்கிழமை தொடங்கியது.

ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளில் சிற்பக் கலைக்கு பிரசித்தி பெற்ற கைலாசநாதா் கோயிலில் திருத்தேரோட்ட விழா நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமான நடைமுறைப்படி தைப்பூச திருத்தோ் விழா கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து, நாள்தோறும் அபிஷேக ஆராதனை, விசேஷ வாகனத்தில் சுவாமி திரு உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட விழாவையொட்டி மேஷ லக்கினத்தில் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் விமரிசையாக நடத்தப்பட்டது.

திருத்தேரினை ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம்பிடித்து இழுத்தனா். தேரோட்டம் சனிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தைப்பூச நாளில் சிவகாமசுந்தரி சமேத கைலாசநாதா் திருத்தேரில் வலம் வந்ததைக் காண ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்தனா். தைப்பூச திருத்தோ் விழாவின் ஒரு பகுதியாக வரும் 9-ஆம் தேதி தெப்போற்சவம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com