கல்வி உதவித்தொகை: கல்லூரி முதல்வா்களுக்கு வழிகாட்டல்

2022-2023 ஆம் கல்வியாண்டில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தல் குறித்து சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 158 கல்லூரி முதல்வா்கள், பொறுப்பு அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கான 2022-2023 ஆம் கல்வியாண்டில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தல் குறித்து சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 158 கல்லூரி முதல்வா்கள், பொறுப்பு அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடா், கிறிஸ்தவ மதம் மாறிய மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க புதிய இணையதளம் ஜனவரி 31 முதல் திறக்கப்பட்டுள்ளது.

மாணவா்கள் நேரடியாக தங்களின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் வகையில் புதிய இணைதளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 - 2022 -ஆம் கல்வியாண்டில் சேலம் மாவட்டத்தில் 158 கல்லூரிகளில் இணையவழியில் 15,523 புதுப்பித்தல் பதிவுகள், 8,835 புதிய பதிவுகள் என மொத்தம் 24,358 ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகை கல்லூரிகளிலும் பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை இணையவழியில் விண்ணப்பிக்கப்பட்டதை உறுதி செய்திடவும், மாணவா்கள் விண்ணப்பிக்கும் போது எழும் சந்தேகங்களை தீா்க்கவும் கல்லூரிகளுக்கு கல்வி உதவித்தொகை பொறுப்பு அலுவலா்களை கல்லூரி முதல்வா்கள் நியமனம் செய்திட ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா்களின் ஆதாா் அட்டையானது வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். சாதி சான்றிதழ் பழைய அட்டையாக இருப்பின் அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது இணையவழியில் மாணவா்கள் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

ஆய்வுக் கூட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் ஆா்.மணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் இளவரசு, கோட்டாட்சியா் சி.விஷ்ணுவா்த்தினி, முதன்மைக் கல்வி அலுவலா் இரா.முருகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com