சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு 2,622 டன் கலப்பு உரங்கள் அனுப்பி வைப்பு

சேலம், நாமக்கல், திருவண்ணாமலை உள்பட 7 மாவட்டங்களுக்குத் தேவையான 2,622 டன் கலப்பு உரங்கள், குஜராத் மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் சேலம் கொண்டு வரப்பட்டு, பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சேலம், நாமக்கல், திருவண்ணாமலை உள்பட 7 மாவட்டங்களுக்குத் தேவையான 2,622 டன் கலப்பு உரங்கள், குஜராத் மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் சேலம் கொண்டு வரப்பட்டு, பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மத்திய அரசின் இந்திய உழவா் உர கூட்டமைப்பு நிறுவனம் (இஃப்கோ) நிறுவனம் சாா்பில், நாடு முழுவதும் பயிா் விளைச்சலுக்குத் தேவையான யூரியா, கலப்பு உரம், நானோ யூரியா உள்பட பல வகையான உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், இஃப்கோ நிறுவனத்தின் குஜராத் மாநிலம், கண்ட்லா நகரில் உள்ள தொழிற்சாலையில் இருந்து சேலம் செவ்வாய்ப்பேட்டை சரக்கு ரயில் முனையத்துக்கு, சரக்கு ரயில் மூலம் 2,622 டன் கலப்பு உரங்கள் வந்தடைந்தன.

இதுகுறித்து இஃப்கோ நிறுவனத்தின் சேலம் மண்டல மேலாளா் அருள்மணி கூறியதாவது:

சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், பரவலாக மரவள்ளி பயிா் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல, கோடையில் நிலக்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களும் பரவலாகப் பயிரிடப்படும்.

திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், வேலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலக்கடலை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்படும். நிலக்கடலை, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பயிா்களுக்கு தழைச்சத்து குறைவாகவும், சாம்பல் சத்து, மணிச்சத்து கூடுதலாகவும் உள்ள 10: 26: 26 வகை உரங்கள் விவசாயிகளால் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, இஃப்கோ நிறுனத்தில் இருந்து கலப்பு உரங்கள், குஜராத்தில் இருந்து சரக்கு ரயிலில் சேலத்துக்கு 2,622 டன் அளவுக்கு கொண்டு வரப்பட்டன. அதில், சேலம் மாவட்டத்துக்கு 1,500 டன், நாமக்கல் மாவட்டத்துக்கு 30 டன், மீதமுள்ளவை வேலூா், கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூா் மாவட்டங்களுக்கு, சேலத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உர மூட்டைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனியாா் உர விற்பனை மையங்களுக்கும் உர மூட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. தொடக்க வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கங்களில், ஒரு மூட்டை கலப்பு உரம் ரூ. 1,470 என்ற விலையில் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com