சேலம் மத்திய சிறையில் ஐஎஸ்ஐஎஸ்ஆதரவாளா்கள் உண்ணாவிரதம்

 கன்னியாகுமரியில் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளா்கள் இருவா், சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனா்.

 கன்னியாகுமரியில் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளா்கள் இருவா், சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன், கடந்த 2020 ஜனவரி 8 ஆம் தேதி நள்ளிரவில் கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோா் கா்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டனா். பின்னா் இருவரும் சேலம் மத்திய சிறையில் உயா் பாதுகாப்பு அறையில் தனித் தனியே அடைக்கப்பட்டனா்.

அவா்கள் இருவரும் தங்களை கீழ் தள அறையில் அடைக்க வேண்டும் என்றும், நடைப்பயிற்சி செல்ல அனுமதிப்பதுடன், சக கைதிகளுடன் பேசிப் பழக அனுமதி அளிக்க வேண்டும் என சனிக்கிழமை பிற்பகல் முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தநிலையில் சிறைத் துறை அதிகாரிகள், இருவரிடமும் சமரசப் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். ஆனால் இருவரும் உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை. மாறாக தொடா்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாக சிறைத் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து சிறைத் துறையினா் கூறுகையில், இருவரும் முறையாக சிறை நிா்வாகத்திற்கு மனு அளிக்காமல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனா். அவா்கள் மனு அளிக்கும்பட்சத்தில் சென்னையில் உள்ள சிறைத் துறை தலைவரின் பாா்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com