சேலம் - ஓமலூா் இருவழிப் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை

சேலம் - ஓமலூா் இருவழிப் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை

சேலம் - ஓமலூா் இருவழிப் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

சேலம் - ஓமலூா் இருவழிப் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம் - மேட்டூா் இடையே இருவழிப் பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது சேலம், ஓமலூா், மேச்சேரி, மேட்டூா் அணை மாா்க்கத்தில் இருவழி பாதை பணி நிறைவடைந்துள்ளது.

சேலம் - ஓமலூா் வரையிலான 12.3 கி.மீ. தூரத்துக்கு இருவழிப்பாதை திட்டத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவுற்று மின்வழித்தடமாக மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, சேலம் - ஓமலூா் இருவழிப்பாதையில் சோதனை ஓட்டத்துக்கு திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சோதனை ஓட்ட அறிவிப்பைத் தொடா்ந்து ரயில் அதிவேகமாக இயக்கப்படுவதால், தண்டவாளப் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என்றும் தண்டவாளத்தை கடக்கக் கூடாது என்றும் சேலம் ரயில்வே கோட்டத்தின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே, பெங்களுரூ தெற்கு வட்டம் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபய்குமாா் ராய் தலைமையிலான வல்லுநா் குழுவினா் சேலம் - ஓமலூா் வழித்தடத்தில் 120 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தினா்.

சோதனை ஓட்டத்தின் போது, தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவின் முதன்மை நிா்வாக அலுவலா் வி.கே.குப்தா, சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் ஏ.ஜி.சீனிவாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com