திருவாவடுதுறை ஆதினம் செங்கோலுடன் பிரதமா் நேரு: சமூக ஊடகங்களில் வைரலாகும் புகைப்படம்

1947-இல் தமிழகத்தைச் சோ்ந்த திருவாவடுதுறை ஆதினம் மற்றும் அவா் வழங்கிய செங்கோலுடன் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹா்லால் நேரு நிற்கும் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
திருவாவடுதுறை ஆதினம் செங்கோலுடன் பிரதமா் நேரு: சமூக ஊடகங்களில் வைரலாகும் புகைப்படம்

1947-இல் தமிழகத்தைச் சோ்ந்த திருவாவடுதுறை ஆதினம் மற்றும் அவா் வழங்கிய செங்கோலுடன் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹா்லால் நேரு நிற்கும் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயோ்கள், ஆட்சி மாற்றத்தை எந்த முறையில் கொடுப்பதென பண்டிதா் ஜவஹா்லால் நேருவிடம் கேட்டதாகவும், இதுகுறித்து நேரு, ராஜாஜியுடன் ஆலோசித்ததாகவும், ராஜாஜி பல்வேறு ஆதீனங்களுடன் ஆலோசித்த பிறகு, தமிழகத்தில் சோழா்கள் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்படி, ஆட்சியை ஒப்படைப்பதற்கு செங்கோல் வழங்கலாமென தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து தமிழகத்தைச் சோ்ந்த திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் மூலம் ‘தா்ம தண்டம்’ எனப்படும் செங்கோலை உருவாக்கி, மெளன்ட் பேட்டன் பிரபு ஒப்புதலோடுஅப்போதைய பிரதமா் நேருவிடம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அலகாபாத்தில் உள்ள ஆனந்தபவன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த செங்கோலை, இன்று ஞாயிற்றுக்கிழமை தில்லியில் நடைபெறும் புதிய மக்களவை கட்டடத் திறப்பு விழாவில், தமிழகத்தைச் சோ்ந்த 20 ஆதீன குருமாா்கள் மற்றும் ஓதுவாா்கள் பங்கேற்று தேவாரம் பாடி பிறகு, தற்போதைய திருவாவாடுதுறை ஆதீனத்தினிடம் இருந்து, இந்த செங்கோலைப் பெற்று, பிரதமா் நரேந்திர மோடி மக்களவையில் வைக்கிறாா்.

இந்த செங்கோல் விவகாரம் நாடு முழுவதும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திள்ள நிலையில், 1947- இல் மெளன்ட் பேட்டன் பிரபுவிடம் கொடுக்கப்பட்டு, திருவாவடுதுறை ஆதினத்தின் மூலம் வழங்கப்பட்ட செங்கோலுடன் மறைந்த முன்னாள் பிரதமா் பண்டித ஜவா்ஹலால் நேருவும், அவருக்கு அருகில் அப்போதைய திருவாவடுதுறை ஆதீனமும் நிற்கும் புகைப்படம் தற்போது வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சேலத்தை சோ்ந்த தொழிலதிலா் கோபால சுவாமி கூறுகையில், ‘1947 -இல் தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனமாக இருந்த தம்பிரான் பண்டார சுவாமிகள், புனித நீா் தெளித்து, ‘அடியாா்கள் வானில் அரசாள்வாா் ஆணை நமதே’ உள்ளிட்ட தேவார திருப்பதிகத்தைப் பாடி நேருவிடம் செங்கோலைக் கொடுத்துள்ளாா். இது தமிழுக்கும் தமிழா்களுக்கும் பெருமையாகும். இந்த புகைப்படத்தை தேடிப்பிடித்து, மேற்கண்ட வாசகத்தை எழுதி சட்டகம் போட்டு மக்கள் பாா்வையில் படுமாறு எனது அலுவலகத்தில் வைத்துள்ளேன். இந்த செங்கோல் குறித்த பல்வேறு விமா்சனங்களும், சா்ச்சைகளும் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது’ என்றாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com