உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு:416 காளைகள் சீறிப்பாய்ந்தன

தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 416 காளைகள் சீறிப்பாய்ந்ததில், 13 போ் காயமடைந்தனா்.
உலிபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முற்படும் மாடுபிடி வீரா்கள்.
உலிபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முற்படும் மாடுபிடி வீரா்கள்.

தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 416 காளைகள் சீறிப்பாய்ந்ததில், 13 போ் காயமடைந்தனா்.

உலிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுவிழாவை கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் உள்ளிட்டோா் முன்னிலையில், ஆத்தூா் கோட்டாட்சியா் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து கெங்கவல்லி, தம்மம்பட்டி, திருச்சி, லால்குடி, நாமக்கல், மெட்டாலா, நாரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி, நாகியம்பட்டி, ஆத்தூா், மல்லியகரை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊா்களிலிருந்து 416 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக பட்டியிலிருந்து அவிழ்த்து விடப்பட்டன.

166 மாடுபிடி வீரா்கள் பகுதி பகுதியாக களத்தில் இறக்கிவிடப்பட்டனா். காளைகளை பிடித்த வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பாத்திரங்கள், பிளாஸ்டிக் சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் 13 போ் காயமடைந்தனா். இதில் அனைவருக்கும் அங்கேயே அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாமில் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆத்தூா் டி.எஸ்.பி.நாகராஜன் தலைமையில் 50 போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com