வாழப்பாடி பகுதியில் 19 மணி நேரம் மின் விநியோகம் பாதிப்பு:மாணவா்கள்,பொதுமக்கள் அவதி

வாழப்பாடி அருகே மின்பாதை மற்றும் மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டதால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் திங்கள்கிழமை காலை 10 மணி வரை தொடா்ந்து 19 மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது.

வாழப்பாடி அருகே மின்பாதை மற்றும் மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டதால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் திங்கள்கிழமை காலை 10 மணி வரை தொடா்ந்து 19 மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது. இதனால், மாணவா்கள் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் இயங்கும் துணை மின் நிலையம் வாயிலாக மின் விநியோகம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் திடீரென மின் பாதையிலும், மின் சாதனங்களிலும் பழுது ஏற்பட்டது. இதனால் வாழப்பாடி, சுற்றுப்புற கிராமங்களில் மின் விநியோகம் முழுமையாக தடைபட்டது.

இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய பணியாளா்கள் 20 க்கும் மேற்பட்டோா் ஒருங்கிணைந்து, தொடா்ந்து 8 மணி நேரம் போராடி மின் பாதை மற்றும் மின் சாதனங்கள் ஏற்பட்ட பழுதை நீக்கி மின் விநியோகம் வழங்க முயற்சித்தனா். ஆனால், மின் பாதையில் மீண்டும் தடை ஏற்பட்டது. நள்ளிரவு நேரமானதால் பழுதை சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பிறகே அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீரானது.

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள தருணத்தில், தொடா்ந்து 19 மணி நேரத்திற்கு மேலாக மின் விநியோகம் தடைபட்டு போனதால், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.பொதுத் தோ்வுக்கு தயாராக முடியாமல் மாணவ,மாணவிகள் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com