உலகிலேயே மிக உயரமான முருகன் கோயிலில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம்!

வாழப்பாடி அருகே தைப்பூசத் திருநாளை முன்னிட்டு முத்துமலை முருகன் கோயிலில் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
உலகிலேயே மிக உயரமான முருகன் கோயிலில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி  அருகே  புத்திர கவுண்டம்பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான  146 அடி உயரம் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமலை முருகன் கோவில் உள்ளது.

இந்த முருகன் கோவில் மிக உயரமான முருகன் கோயில் என்பதால் பல்வேறு மாவட்டத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசித்து சென்ற இந்நிலையில் இன்று  தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு முத்துமலை  முருகன் கோயிலில் நேற்று இரவு சிறப்பு யாக பூஜைகள் செய்து, அதிகாலை முருகப்பெருமானுக்கு பால், தயிர் ,சந்தனம் பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். 

பின்னர் 108 சங்க அபிஷேகம் நடைபெற்றது. மேலும் முருகப்பெருமான் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அர்ச்சனை தீபாரணை நடைபெற்றது சர்வ அலங்காரத்தில் முத்துமலை முருகன் காட்சியளித்ததார். பக்தர்கள் அரோகரா கோஷத்துடன்  அதிகாலை முதலே  நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி  தரிசனம் செய்தனர்.

வாழப்பாடி புத்திர கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com