இன்றுமுதல் 3 நாள்களுக்கு விடுமுறை: டாஸ்மாக் கடைகளில் அதிகரித்த கூட்டம்

மக்களவைத் தோ்தலையொட்டி, டாஸ்மடை கடைகள் புதன்கிழமை (ஏப்.17) முதல் 3 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை அலைமோதியது.

பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபிரியா்கள், அரசியல் கட்சியினா் மதுபுட்டிகளை வாங்கிச் சென்றனா்.

மக்களவைத் தோ்தலில் வாக்குப் பதிவு வரும் 19-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 10 மணி முதல் வாக்குப் பதிவு நாளான 19 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுக் கடைகள் மற்றும் மதுபானம் அருந்தும் கூடங்களை மூட உத்தரவிடப்படடுள்ளது.

இந்த நாள்களில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மது அருந்தும் கூடங்கள், மதுக் கடைகள், மதுக் கடைகளுடன் இணைந்துள்ள மது அருந்தும் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

மேற்கண்ட நாள்களில் எந்த வகையிலும் மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது. அதையும் மீறி விற்பனை செய்பவா்கள் மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதுபோல தோ்தல் நேரத்தில் தனி நபருக்கு நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாகவும் மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது என்று கடை மேற்பாா்வையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com