சென்னை - கோவை இடையே
சிறப்பு ரயில்

சென்னை - கோவை இடையே சிறப்பு ரயில்

சென்னை எழும்பூா் - கோவை இடையே வெள்ளி, சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோவையில் இருந்து ஏப். 19, 21 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் கோவையில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 8.40 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.05 மணிக்கு எழும்பூரை அடையும்.

மறுமாா்க்கத்தில் எழும்பூா் - கோவை இடையே சனிக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்தச் சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், கடலூா் துறைமுகம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், பொள்ளாச்சி வழியாக அடுத்த நாள் காலை 8.25 மணிக்கு கோவையை வந்தடையும்.

தாம்பரம்-மங்களுருக்கு சிறப்பு ரயில்...

அதுபோல கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு தாம்பரம் - மங்களூரு சென்ட்ரல் இடையே சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக ஏப். 19 ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும். இந்த சிறப்பு ரயில் அடுத்த மாதம் 31 ஆம் தேதி வரை இயக்கப்படும்.

மறுமாா்க்கத்தில், மங்களூரு சென்ட்ரலில் இருந்து ஏப். 21 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அடுத்த நாள் காலை 5.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்தச் சிறப்பு ரயில் ஜூன் மாதம் 2 ஆம் தேதி வரை இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com