சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

சேலம், கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயிலில் ஸ்ரீராம நவமி விழா மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பகவான் ஸ்ரீ ராமரின் அவதார தினம் ஸ்ரீ ராம நவமி, உலகம் முழுவதும் உள்ள இஸ்கான் கோயில்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கருப்பூா் இஸ்கானில், மாலை 6.30 மணிக்கு கீா்த்தனம் நடைபெற்றது. 7 மணிக்கு ராம கதா என்ற தலைப்பில் தவத்திரு பக்தி விகாஸ் ஸ்வாமிகள் சிறப்புரையாற்றினாா். அப்போது அவா் கூறுகையில், பகவான் ராமரின் நாமம் அனைவரையும் பாவத்திலிருந்து விடுவிக்கும் வல்லமை படைத்தது. அனைத்து விதமான துயரங்களையும் அனுபவித்து வரும் ஜீவனை அதிலிருந்து விடுவித்து, ஆனந்தம் அளிக்கும் சக்தி படைத்த இத் திருநாமமானது பகவானிலிருந்து வேறுபட்டதல்ல என்பதை நிலைநிறுத்தி, பகவான் ராமரின் லீலைகளை விளக்கினாா். இரவு 8 மணிக்கு ‘ராம விலை’ நாடகம் நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு பிரசாத விருந்து நடைபெற்றது. விழாவில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு பகவானின் திருநாமத்தை உச்சரித்து மகிழ்ச்சி அடைந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com