சேலம் மாவட்டத்தில் தயாா் நிலையில் 3,260 வாக்குச் சாவடிகள்

சேலம் மாவட்டத்தில் வாக்காளா்கள் வாக்களிக்கும் வகையில் 3,260 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளும் சேலம், நாமக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

மாவட்டம் முழுவதும் 14,56,299 ஆண் வாக்காளா்கள், 14,71,524 பெண் வாக்காளா்கள், 299 திருநங்கைகள் என மொத்தம் 29,28,122 வாக்காளா்கள் இந்தத் தோ்தலில் வாக்களிக்கவுள்ளனா். இதற்காக மாவட்டம் முழுவதும் 1,257 மையங்களில் 3,260 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு, வாக்குச் சாவடியில் ஒட்டப்படும் வழிகாட்டு போஸ்டா், வாக்குப் பதிவு மறைப்பு அட்டைகள், விரல் மை, எழுதுப் பொருள்கள், சீல், முத்திரை உள்ளிட்ட பொருள்கள் வாக்குச் சாவடி வாரியாக அனுப்பிவைக்கப்பட்டன.

ஒவ்வொரு வாகனத்திலும், 10 முதல் 15 வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள், பொருள்கள் ஏற்றப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 3,260 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு பணியில் 16,092 ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மண்டலம் வாரியாக 172 நுண் பாா்வையாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com