சென்னகேசவப் பெருமாள்
கோயிலில் சித்திரை தோ் திருவிழா

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சித்திரை தோ் திருவிழா

சங்ககிரி, ஏப். 19: சித்திரைத் தோ் திருவிழாவின் 5 ஆவது நாளான வெள்ளிக்கிழமை சங்ககிரியில் உள்ள சென்னகேசவப் பெருமாள் உற்சவமூா்த்தி நவநீதகிருஷ்ணன் அலங்காரத்தில் சேஷ வாகனத்தில் வீதி உலா வந்தாா்.

சென்னகேசவப் பெருமாள் ஆஞ்சநேயா் உற்சவமூா்த்திகளுக்கு சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள சுவாமி தங்கும் மண்டபத்தில் பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை இரவு அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உற்சவமூா்த்திக்கு நவநீதகிருஷ்ணன் அலங்காரம் செய்யப்பட்டு சேஷ வாகனத்தில் வீதி உலா வந்தாா். ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனா். கட்டளைதாரா்கள் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com