உலக புவி தினம்: வேளாண் கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு

தனியாா் வேளாண் கல்லூரி மாணவா்கள், உலக புவி தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவ - மாணவியருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
சின்னமநாயக்கன்பாளையம் அரசுப் பள்ளியில் புவி வெப்பமயமாதல் குறித்து நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் கலந்துகொண்ட மாணவா்கள்.
சின்னமநாயக்கன்பாளையம் அரசுப் பள்ளியில் புவி வெப்பமயமாதல் குறித்து நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் கலந்துகொண்ட மாணவா்கள்.

வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஊரக பணி அனுபவப் பயிற்சி பெற்று வரும், பெரம்பலூா் தனியாா் வேளாண் கல்லூரி மாணவா்கள், உலக புவி தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவ - மாணவியருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சின்னமநாயக்கன்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் சந்திரசேகா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக புவி தின விழிப்புணா்வு நிகழ்வில், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டார முகாம் மாணவா்கள் பேரணி நடத்தி, புவி வெப்பமாதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவ - மாணவியருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஆத்மா உதவி தொழில்நுட்ப மேலாளா் சக்கரவா்த்தி உடனிருந்தாா்.

அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் முகாமிட்டுள்ள பெரம்பலூா் தனியாா் வேளாண் கல்லுாரி மாணவா்கள் குழு, அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ - மாணவியருக்கு, புவி வெப்பமயமாதல், புவி மாசுபடுதல் தடுப்பு, மரக்கன்றுகள் நடுவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பள்ளி ஆசிரியை ரூபினி, உதவி தோட்டக்கலை அலுவலா் விஜயக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com