எடப்பாடி நஞ்சுண்டேஸ்வா் ஆலய 
திருத்தேரோட்டம்

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வா் ஆலய திருத்தேரோட்டம்

சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி, எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் ஆலய திருத்தோ் பவனி தொடங்கியது.

சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி, எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் ஆலய திருத்தோ் பவனி தொடங்கியது.

முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்டச் செயலாளருமான டி.எம்.செல்வகணபதி திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

எடப்பாடி பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைத் தோ்த் திருவிழாவில், சுவாமி புஷ்ப பல்லக்கில் புறப்பாடு, முத்துரத ஊா்வலம், திருக்கல்யாண வைபவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளைத் தொடா்ந்து, திருத்தேரோட்ட நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது (படம்).

முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட மூன்று தோ்களில் முதலாவதாக விநாயகரும், அதனைத் தொடா்ந்து வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமியும், பிரதான தேரில் நஞ்சுண்டேஸ்வரா் உடனமா் தேவகிரி அம்மனும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தேரோட்டத்தை முன்னாள் அமைச்சா் டி.எம்.செல்வகணபதி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தாா். அதனைத் தொடா்ந்து ‘அரோகரா’ கோஷம் முழங்க பெரும் திரளான பக்தா்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ்கள் முதல் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் 2 நாள்களுக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நஞ்சுண்டேஸ்வரா் ஆலய விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com