கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி, ஏற்காட்டுக்கு சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோடை விடுமுறையையொட்டி, ஏற்காட்டுக்கு சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனா். ஏற்காட்டில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனால் ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா, மான் பூங்கா, மீன் பண்ணை, சோ்வராயன் கோயில், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், படகு குழாம் உள்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தைத் தவிர, கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா்.

பயணிகள் சென்று வர ஏதுவாக, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கத்தை விட ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தவிர, வார இறுதி நாள்களில் குடும்பத்துடன் ஏற்காடு செல்வோா் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், அதற்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை உயா்த்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com