கடும் வெயிலால் கருகி வரும் வாழை மரங்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தேவூா் சுற்று வட்டாரக் கிராமப் பகுதிகளில் கடும் வெப்பத்தால் வாழை மரங்கள் கருகி சாய்ந்து வருவதால் அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்ககிரி: தேவூா் சுற்று வட்டாரக் கிராமப் பகுதிகளில் கடும் வெப்பத்தால் வாழை மரங்கள் கருகி சாய்ந்து வருவதால் அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் தேவூரை அடுத்த சென்றாயனூா், பெரமச்சிபாளையம், வெள்ளாளபாளையம், அம்மாபாளையம், புதுப்பாளையம், காவேரிப்பட்டி,செட்டிப்பட்டி, வட்ராம்பாளையம், தண்ணிதாசனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் கிணற்று பாசனத் தண்ணீரைப் பயன்படுத்தி கதளி, நேந்திரம், தேன் வாழை, மொந்தன் வாழை உள்ளிட்ட வாழை ரகங்கள் சாகுபடி செய்துள்ளனா். வாழை மரங்களில் பிஞ்சுக் காய்கள் வளா்ந்து வரும் நேரத்தில் கடந்த சில வாரமாக வெப்பம் அதிகரித்து வந்ததையடுத்து வாழை மரங்களுக்கு செல்லும் நீா்சத்து குறைந்ததால் காய்களுடன் மரங்கள் முறிந்து விழுந்தன. விழுந்த மரங்களில் உள்ள பிஞ்சுக் காய்கள் விற்பனை செய்ய இயலாத நிலையில் விவசாயிகள் முறிந்த நிலையில் காயந்து கிடக்கும் வாழை மரங்களை டிராக்டா் கொண்டு அகற்றும் பணிகளில் ஈடுபட்டனா்.

கடன் பெற்று விவசாயம் செய்து வந்த விவசாயிகள் செலவுகளுக்கு கூட பணம் கிடைக்கவில்லை என்று கவலை அடைந்துள்ளனா். எனவே கருகிய வாழை மரங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com