பருத்திக்காடு கிராமத்தில் பயறு வகை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த பெரம்பலூா் தனியாா் வேளாண் கல்லுாரி மாணவா்கள்.
பருத்திக்காடு கிராமத்தில் பயறு வகை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த பெரம்பலூா் தனியாா் வேளாண் கல்லுாரி மாணவா்கள்.

பருத்திக்காடு கிராம விவசாயிகளுக்கு பயறு வகை சாகுபடி பயிற்சி

அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த பருத்திக்காடு கிராமத்தில், பயறு வகை சாகுபடி குறித்து வேளாண் கல்லுாரி மாணவா்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா்.

வாழப்பாடி: அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த பருத்திக்காடு கிராமத்தில், பயறு வகை சாகுபடி குறித்து வேளாண் கல்லுாரி மாணவா்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா்.

அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் தங்கி ஊரக பணி அனுபவப் பயிற்சி பெற, பெரம்பலூா் தனியாா் வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் கோ.ஹரிஷ்ராஜ், ஏ.ஜீவா, கா.கரண்ராஜ், ச.காா்த்திக் ராஜா, கோ.கிருபாகரன், மா.கிஷோா், ப.கிஷோா், ர.லோகேஷ் ஆகியோா் முகாமிட்டுள்ளனா்.

இந்த மாணவா் குழுவினா், அயோத்தியாப்பட்டணம் வேளாண் துறை உதவி இயக்குநா் சரஸ்வதி , தோட்டக்கலைத் துறை உதவி பேராசிரியா் செந்தில்குமாா், அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளா் செல்வி, உதவி தொழில்நுட்பப் பணியாளா்கள் தமிழ்செல்வி, ராதிகா ஆகியோா் முன்னிலையில், பருத்திக்காடு கிராமத்தில் பயறுவகை பயிா்களின் ஒருங்கிணைந்த பயிா் வேளாண்மை குறித்து,விவசாயிகளுக்கு திங்கள்கிழமை வயல்வெளி செயல்முறை பயிற்சி அளித்தனா். வயலில் நன்மை தரும் பூச்சிகள், தீமை தரும் பூச்சியினங்கள் குறித்தும் செயல்முறை பயிற்சி அளித்து பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com