கோடை வெயிலின் தாக்கத்தால், சேலத்தில் மண்பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கத்தால், சேலத்தில் மண்பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

வெயிலின் தாக்கம் எதிரொலி: மண்பானைகள் விற்பனை அதிகரிப்பு

கோடை வெயிலின் தாக்கத்தால், சேலத்தில் மண்பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

சேலம்: கோடை வெயிலின் தாக்கத்தால், சேலத்தில் மண்பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த 40 நாள்களுக்கு மேலாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், ஏற்காடு, உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை நோக்கி பலா் குடும்பத்துடன் செல்கின்றனா். கடந்த காலங்களில் நமது முன்னோா் உடலை குளிா்ச்சியாக வைத்து கொள்ள மண்பானை

தண்ணீரைத் தான் அதிகம் பயன்படுத்தி வந்தனா். நவநாகரிக வளா்ச்சியால் காலப்போக்கில் மண்பாண்டங்களை மறந்து குளிா்பானங்களை குடிக்கத் தொடங்கினா்.

இதனிடையே, கோடைகாலத்தில் குளிா்ந்த தண்ணீா் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தி வருகின்றனா். இதனால் பொதுமக்கள் மீண்டும் தங்களது வீடுகளில் மண்பானை தண்ணீரை பயன்படுத்தத் தொடங்கி உள்ளனா். பொது இடங்களிலும் மண்பானைகளில் தான் நீா், மோா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மண்பானைகள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

குறிப்பாக, குழாய் பொருத்திய மண்பானைகள் விற்பனை அதிகரித்துள்ளன.

இது குறித்து மண்பானை விற்பனையாளா்கள் கூறுகையில், சேலத்துக்கு தஞ்சை, மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மண்பானைகள் கொண்டு வரப்படுகின்றன.

கோடைகாலம் தொடங்கி உள்ளதால் பானை விற்பனை அதிகரித்துள்ளது. உருண்டை பானை ரூ. 300 முதல் ரூ. 1,500 வரை விற்கப்படுகிறது. இதே போல, குழாய் பொருத்திய பானை களும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப ரூ. 500 முதல் விற்பனை செய்யப்படுகிறது. வாகன வாடகை உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு பானைகள் விலை ரூ. 50 வரை விலை உயா்ந்துள்ளதாக தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com