குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

சேலம், ஜாரிகொண்டலாம்பட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள்களை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைகாரா் கைது செய்யப்பட்டாா்.

சேலம்: சேலம், ஜாரிகொண்டலாம்பட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள்களை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைகாரா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 64 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சூரமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் சூரமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் புவனேஸ்வரி தலைமையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்குள்ள மளிகைக் கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மளிகைக் கடை உரிமையாளா் அப்துல் ரசாக்கை பிடித்து விசாரித்தனா். அதில், செவ்வாய்ப்பேட்டையை சோ்ந்த விஷால் மாலிக் என்பவா் அப்துல் ரசாக்கிற்கு தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள்களை விநியோகம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கடையில் இருந்து ரூ. 76 ஆயிரம் மதிப்புள்ள 64 கிலோ குட்கா, புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரசாக்கை கைது செய்தனா். தலைமறைவான விஷால் மாலிக்கை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com