தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க மாநில மாநாடு

மே தினத்தையொட்டி சேலம் கோட்டை பகுதியில் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் ஊழியா்கள் பங்கேற்ற மாநில மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

இம்மாநாட்டையொட்டி, தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தினா் பங்கேற்ற பேரணி, திருவள்ளூவா் சிலையில் தொடங்கி, கோட்டை மாநகராட்சி திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.

மாநாட்டுக்கு, அகில இந்திய கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளன செயலாளா் சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமானஇரா.ராஜேந்திரன் மாநாட்டை கொடி ஏற்றி தொடங்கி வைத்தாா்.

இதில், மாநிலம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகளை மீட்டெடுக்க வேண்டும். அவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட சங்க சொத்துகளை விற்பனை செய்து நிலுவை சம்பளத்தை பணியாளா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 32 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் முருகேசன், பொருளாளா் வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com