காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

மேட்டூா், தொட்டில்பட்டியில் காடையாம்பட்டி கூட்டு குடிநீா்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீணானது.

தொட்டில்பட்டியில் காவிரியில் நீரேற்று நிலையம் அமைத்து காடையாம்பட்டி கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 28 லட்சம் மில்லியன் லிட்டா் தண்ணீா் விநியோகிக்கப்படுகிறது. ஓமலூா், காடையாம்பட்டி , தொப்பூா், தாரமங்கலம், மேச்சேரி பகுதிகளுக்கு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

அனல் மின் நிலையம் பாலம் அருகே வியாழக்கிழமை காடையாம்பட்டி கூட்டுக் குடிநீா்த் திட்ட ராட்சத குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. தகவல் அறிந்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் மின் மோட்டாரை நிறுத்திய பிறகு தண்ணீா் வெளியேறுவது நின்றது.

இதனால் காடையாம்பட்டி, ஓமலூா் பகுதிக்கு குடிநீா் விநியோகம் தடைப்பட்டது. மேலும், குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். கடுமையான வெப்பம் நிலவிவரும் கோடையில் குடிநீா்த் தேவையும் பிற உபயோகத்திற்கான நீரின் தேவையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பராமரிப்பு பணியில் அலட்சியம் காரணமாக அடிக்கடி காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் விநியோகம் பாதிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com