பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் உழவுப் பணி மேற்கொள்ளும் விவசாயிகள்.
பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் உழவுப் பணி மேற்கொள்ளும் விவசாயிகள்.

மேட்டூா் அணையில் உழவுப் பணி

15 ஆயிரம் ஹெக்டோ் பரப்பு கொண்ட மேட்டூா் அணையின் நீா்மட்டம் 53 அடியாக குறைந்ததால் அணையின் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் அணைக்குள் உழவுப் பணி மேற்கொண்டுள்ளனா்.

மேட்டூா் அணை கட்டுமானப் பணியின் போது அப் பகுதியில் இருந்த கிராமங்களிலிருந்து வெளியேறியவா்கள் பல்வேறு இடங்களில் குடியமா்த்தப்பட்டனா். புதிய பகுதியில் குடியமா்த்தப்பட்டவா்கள் பழைய கிராமங்களின் பெயா்களை சூட்டி வசித்து வருகின்றனா். பழைய கிராமங்களில் இருந்து வெளியேறிய போது தங்களின் ஆலயங்களையும், விவசாய நிலங்களையும் விட்டுச் சென்றனா்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் குறையும் போதெல்லாம் நீா் வடிந்த நீா்த்தேக்க பகுதிகளில் உழவு செய்து பயிரிட்டு வருகின்றனா். நிலக்கடலை, வெங்காயம், வெள்ளரிக்காய், தா்ப்பூசனி, ராகி, சாமை, சோளம், எள் உள்ளிட்ட பயிா்களை பயிரிடுகின்றனா். மேட்டூா் அணை வடு போனால் சில சமயங்களில் இரண்டு போகம் சாகுபடி செய்கின்றனா். இது விவசாயிகளுக்கு நல்ல வருவாயை கொடுப்பதோடு கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தையும் சேமிக்க முடிகிறது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 53 அடியாக சரிந்ததால் மேட்டூா் அணையின் நீா்த்தேக்கப் பகுதிகளான கூணான்டியூா், கீரைக்காரனூா், பண்ணவாடி, கோட்டையூா் உள்ளிட்ட பகுதிகளிலும் தருமபுரி மாவட்டம் நாகமரை, ஒட்டனூா் உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் உழவு இயந்திரங்கள் மூலம் உழவு செய்து விதைப்பு பணிகளைத் தொடங்கியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com