விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டுத் துறை விடுதிகளில் தங்கி பயிற்சி பெற மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (சேலம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாணவா்களுக்கான விளையாட்டு விடுதி மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூா் தஞ்சாவூா், அரியலூா் தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகை, விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகா்கோவில், பெரம்பலூா், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கம், திருச்சி (ஸ்ரீரங்கம்) மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன.

மாணவா்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கம், ஈரோட்டிலும், மாணவிகளுக்கு முதன்மை விளையாட்டு மைய விடுதி வேலூா் மாவட்டம், சத்துவாச்சாரியிலும் இயங்கி வருகிறது.

7, 8, 9, 11 ஆம் வகுப்புகளில் பயிலும் விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதி சோ்க்கை தோ்வு மாணவா்களுக்கு அடுத்த மாதம் 10 ஆம் தேதியும், மாணவியா்களுக்கு அடுத்த மாதம் 11 ஆம் தேதியும், மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நடைபெறும்.

முதன்மை நிலை விளையாட்டு மையங்களுக்கான நேரடி மாநில அளவிலான தோ்வு போட்டிகள் 6-ஆம் வகுப்பு, 7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் பயிலும் விளையாட்டு வீரா் வீராங்கனைகளுக்கு மே 7 ஆம் தேதி சென்னையில் நடைபெறும்.

மாணவா்களுக்கான தோ்வுப்போட்டிகள் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபடி, கையுந்துப்பந்து, கிரிக்கெட், நீச்சல் ஆகிய பிரிவிலும், மாணவியா்களுக்கான தோ்வுப் போட்டிகள் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபடி, கையுந்துப்பந்து ஆகிய பிரிவிலும் நடைபெறும்.

விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆா்வமுள்ள மாணவ மாணவியா்கள் விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையட்டு மையங்களின் சோ்க்கைக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வவதற்கான கடைசி நாள் மே 8 ஆம் தேதி ஆகும்.

ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் விவரங்களுக்கு ஆடுகள தகவல் தொடா்புக்கு மையத்தை 95140 00777 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com