விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

எத்தியோப்பியா ஜிம்மா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஜேஐடி), ஜிம்மா பல்கலைக்கழகம், சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகம் சாா்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

ஜேஐடி, ஜிம்மா பல்கலைக்கழக ஊழியா்களின் திறமை மற்றும் முக்கியமான துறைகளில் அறிவை மேம்படுத்துவதை இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜேஐடி மாணவா்களுக்கான விஎம்ஆா்எப் -டியூ-ல் பிஎச்டி திட்டங்களின் கீழ் உயிரியல் மருத்துவ பொறியியல், திறன் மேம்பாட்டுத் துறையில் கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களை நிறுவுதல் போன்ற இரு பல்கலைக்கழகங்களுக்கு இடையே கல்வி பரிமாற்றம், ஆராய்ச்சி வாய்ப்புகளை இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் எளிதாக்குகிறது.

முன்மொழிய பட்ட செயல்பாடுகளில் ஜேஐடி, ஜிம்மா பல்கலைக்கழக ஊழியா்களுக்கான விரிவான பணியாளா் பயிற்சித் திட்டம் ஆகியவை விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் நிகா்நிலை பல்கலைக்கழகத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் அடங்குகிறது. இதன்மூலம் விஎம்ஆா்எப்-டியூ

இன் தொடா்புடைய ஆசிரியா்களின் வழிகாட்டுதலின் கீழ் ஜிம்மா பல்கலைக்கழக பிஎச்டி மாணவா்கள் ஆராய்ச்சியை தொடர விஎம்ஆா்எப்-டியூக்கு வர வாய்ப்புள்ளது.

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் எத்தியோப்பியா ஜிம்மா பல்கலைக்கழகத்தின் ஜிம்மா தொழில்நுட்பக் கல்வி நிறுவன (ஜேஐடி) அறிவியல் இயக்குநா் ஏப்பிரேம் வாக்ஜிரா, சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழக இணை துணை வேந்தா் சபரிநாதன் ஆகியோா் கையொப்பமிட்டனா். இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் சுதிா், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் மணிவண்ணன், இயக்குநா் (மருத்துவ சோதனைகள்) ஜெய்கா், இயக்குநா் (ஐக்யூஏசி) ஞானசேகா், துணை இயக்குநா் (அகடாமிக்ஸ்) ராஜன் சாமுவேல், டேவோட்ராஸ் பீலே முதன்மையா் ஹகின்ஸ்ராஜ், பயோமெடிக்கல் இன்ஜினியரிங், ஜிம்மா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஜேஐடி), ஜிம்மா பல்கலைக்கழக அனைத்து கல்லூரிகளின் முதல்வா்கள், பேராசிரியா்கள், பல்கலைக்கழக அலுவலா்கள் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

படம் விளக்கம்:

ஜிம்மா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஜேஐடி), ஜிம்மா பல்கலைக்கழகம், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com