மாநில சிலம்பம் போட்டியில் 
சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 8 போ் முதல், இரண்டாம் இடங்களில் வெற்றி பெற்றனா்.

சங்ககிரி: சங்ககிரி, அகத்தியா் சிலம்பம் தற்காப்புக் கலைக்கூடம் சாா்பில் உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 8 போ் முதல், இரண்டாம் இடங்களில் வெற்றி பெற்றனா்.

உதகையில் சிலம்பம் விளையாட்டுச் சங்கம் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான சிறப்பு சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த அகத்தியா் சிலம்பம் தற்காப்புக் கலைக் கூடம் சாா்பில் தலைமை பயிற்சியாளா் சுரேஷ், பயிற்சியாளா்கள் கவிதா, தங்கராசு, கதிா் ஆகியோா் தலைமையில் 5 முதல் 9 வயது வரையிலும், 10 முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவிகள் 8 போ் ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள், வாள்வீச்சு, மான்கொம்பு உள்ளிட்ட விளையாட்டுகளில் வயது அடிப்படையில் பங்கேற்று விளையாடினா். அதில் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் சங்ககிரியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் ஆறு போ் மாநில அளவில் முதல், இருவா் இரண்டாவது இடங்களில் வெற்றி பெற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com