வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

சேலம், மே 5: வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை வணிகா் விடுதலை முழக்க மாநாடு நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மதுரை மாநாட்டில் பங்கேற்றனா்.

இதையொட்டி, சேலம் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சேலம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கடைவீதி, செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, ரயில் நிலையம் உட்பட அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக, மளிகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், காய்கறிக் கடைகள், நகைக் கடைகள் உட்பட பல்வேறு கடைகள் முற்றிலும் மூடப்பட்டிருந்தன.

இதே போல, சேலம் புகா் பகுதிகளான ஆத்தூா், வாழப்பாடி, ஓமலூா், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூா் உட்பட பல்வேறு பகுதிகளிலும் வணிகா் தினத்தையொட்டி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com