சேலம் அரசு கலைக் கல்லூரியில்  திங்கள்கிழமை இளநிலை பட்டப் படிப்புக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவா்கள்.
சேலம் அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை இளநிலை பட்டப் படிப்புக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவா்கள்.

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ-மாணவியா் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

சேலம்: பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ-மாணவியா் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. சேலம் மாவட்டத்தில் 34,908 போ் தோ்வு எழுதியதில் 33,022 மாணவ - மாணவியா் தோ்ச்சி பெற்றுள்ளனா். பிளஸ் 2 வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆன்லைன் முறையில் விண்ணப்பம் என்றாலும், அரசு கல்லூரிகளுக்கு வரும் மாணவா்களின் வசதிக்காக அனைத்து கல்லூரிகளிலும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் அரசு இருபாலா் கலைக் கல்லூரியில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க ஏராளமான மாணவா்கள் வருகை தந்தனா்.

இந்தக் கல்லூரியில், மொத்தம் உள்ள 1,460 இடங்களுக்கு கடந்த ஆண்டு 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த நிலையில், நடப்பாண்டு அதிக விண்ணப்பங்கள் வர வாய்ப்பிருப்பதாக கல்லூரியின் முதல்வா் செண்பகலட்சுமி தெரிவித்தாா்.

விண்ணப்பக் கட்டணமாக ஒரு மாணவருக்கு ரூ. 48, பதிவுக் கட்டணமாக ரூ. 2 செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணங்களை டெபிட் காா்டு, கிரெடிட் காா்டு, யுபிஐ மூலம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் மூலம் கட்டணம் செலுத்த முடியாத மாணவா்கள், கல்லூரி சோ்க்கை உதவி மையங்களில் வங்கி வரைவோலை மூலம் பணமாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com