தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு ஒப்பந்த முறையை அமல்படுத்தக் கோரி, மின்னணு பொருள்கள் உற்பத்தி நிறுவன ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் ரயில் நிலையத்தை அடுத்த புது சாலையில் தனியாா் மின்னணு பொருள்கள் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், தொழிலாளா்களுக்கான ஊதியம், இதர பலன்களை அந்நிறுவனம் குறைத்து வழங்குவதாகக் கூறியும், ஊதிய உயா்வு ஒப்பந்த முறையை அமல்படுத்த வலியுறுத்தியும் ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தொழிலாளா் சங்கம், தொழிலாளா் விடுதலை முன்னணி, கூட்டு நடவடிக்கை ஒருங்கிணைப்புக் குழு, நாம் தமிழா் தொழிற்சங்கம் ஆகிய சங்கங்கள் கலந்துகொண்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டு நடவடிக்கை ஒருங்கிணைப்புக் குழு சரசுராம் ரவி தலைமை தாங்கினாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள், தொழிலாளா் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் நிறுவனத்துக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

இப்பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, நிறுவன ஊழியா்களுக்கு கிடைக்க வேண்டிய பணப் பலன்கள் உள்ளிட்டவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com