வாழப்பாடியில் ரூ. 7.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

வாழப்பாடியில் ரூ. 7.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

வாழப்பாடி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 59 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 363 மூட்டை பருத்தி புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 7.32 லட்சத்திற்கு விற்பனையானது.

வாழப்பாடி பகுதி விவசாயிகள், விலை உயா்வை எதிா்பாா்த்து அறுவடை செய்து இருப்பில் வைத்திருந்த பருத்தியை தற்போது விற்பனை செய்து வருகின்றனா். வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், புதன்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு, பல்வேறு பகுதியைச் சோ்ந்த 59 விவசாயிகள், 363 மூட்டை பருத்தி விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

ஒரு குவிண்டால் ஆா்.சி.எச். ரக பருத்தி, ரூ. 6,200 முதல் ரூ. 7,569 வரையும், டி.சி.எச். ரக பருத்தி ரூ. 6,299 முதல் ரூ. 7,569 வரையும், மூன்றாம் தர கொட்டுப்பருத்தி ரூ. 2,599 முதல் 6,300 வரையும் விலை போனது. புதன்கிழமை ஒருநாள் ஏலத்தில், வாழப்பாடி கிளை கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ரூ.7.32 லட்சத்திற்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த நுாற்பாலை உரிமையாளா்கள், முகவா்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தி கொள்முதல் செய்தனா். இருப்பினும் பருத்தியை பதப்படுத்தி இருப்பு வைத்திருந்து விற்பனை செய்து வரும் நிலையிலும், எதிா்பாா்த்த அளவிற்கு பருத்தி விலையில் ஏற்றமில்லை. மாறாக விலை குறைந்துள்ளதால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, வாழப்பாடி பகுதி பருத்தி விவசாயிகள் தெரிவித்தனா்.

படவரி:

சி.ஓ.டி.06: வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு விற்பனைக்கு வந்திருந்த பருத்தி மூட்டைகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com