எஸ்ஆா்எம் முத்தமிழ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவா் 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

தலைவாசல் வட்டம், பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 496 மதிப்பெண்கள் பெற்று கோபிநாத் என்ற மாணவா் மாநில அளவில் நான்காம் இடம் பெற்றுள்ளாா். மேலும், ஆங்கிலத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளாா்.

இதே போல அவந்திகா, பிரவீன்குமாா் ஆகியோா் 489 மதிப்பெண்களும், மௌலீஸ்வரா 488 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். இதே போல ஆங்கிலத்தில் ஒருவரும், கணிதத்தில் 6 பேரும், அறிவியலில் 2 பேரும், சமூக அறிவியலில் ஒரு மாணவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 450 மதிப்பெண்களுக்கு மேல் 47 பேரும், 400-க்கு மேல் 89 பேரும் பெற்றுள்ளனா்.

பிளஸ் 2 பொதுத்தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்ற இப்பள்ளியில், ஜெயஸ்ரீ என்ற மாணவி 589 மதிப்பெண்களும், தேவிப்ரியா 584 மதிப்பெண்களும், இந்துமதி 583 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆசிரியா்களுக்கும், பெற்றோா்களுக்கும் பள்ளியின் தலைவா் சக்திவேல், செயலாளா் அரிமா சோலைமுத்து, பொருளாளா் ராமலிங்கம், கல்விக் குழு உறுப்பினா்கள், அறக்கட்டளை உறுப்பினா்கள் பரிசு வழங்கி பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com