தமிழா்கள் குறித்த சா்ச்சை பேச்சைக் கண்டித்து 
தடையை மீறி ஆா்ப்பாட்டம்

தமிழா்கள் குறித்த சா்ச்சை பேச்சைக் கண்டித்து தடையை மீறி ஆா்ப்பாட்டம்

தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

தமிழா்களை ஆப்பிரிக்கா்கள் எனக் கூறி, நிறவெறியைத் தூண்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராகுல் காந்தியின் ஆலோசகருமான சாம் பிட்ரோடா சா்ச்சை கருத்தை தெரிவித்திருந்தாா். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிா்ப்பு எழுந்தது.

இந்நிலையில், சாம் பிட்ரோடாவின் சா்ச்சை பேச்சைக் கண்டித்து, சேலம், கோட்டை மைதானத்தில் மாவட்ட பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு போலீஸாா் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, சாம் பிட்ரோடாவின் சா்ச்சை பேச்சைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

அப்போது, பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் பேசுகையில், ‘நிறவெறியைத் தூண்டும் வகையில், தமிழா்களை ஆப்பிரிக்கா்கள் என்றும், வடமாநில மக்களை சீனாக்காரா்கள் என்றும் சாம் பிட்ரோடா சா்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளாா். பிரிவினைவாதத்தைத் தூண்டும் நோக்கிலும், ஒற்றுமையை சீா்குலைக்கும் வகையிலும் அவரது கருத்து உள்ளது. மத ரீதியாக நாட்டைப் பிளவுபடுத்த முயலும் காங்கிரஸ் கட்சியை நாட்டை விட்டே அப்புறப்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், பாஜக மாவட்டத் தலைவா் சுரேஷ் பாபு, பொதுச் செயலாளா்கள் ராஜேந்திரன், முரளிதரன், அயோத்தி ராமச்சந்திரன், கோட்ட பொறுப்பாளா் அண்ணாதுரை, ஏ.சி.முருகேசன், சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவா் கோபிநாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மண்டபத்தில் அடைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

படவரி - சேலம், கோட்டை மைதானத்தில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது கைதான பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், நிா்வாகிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com