மேட்டூா் ஜிவி மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

மேட்டூா் ஜிவி மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

மேட்டூா், மாசிலா பாளையத்தில் உள்ள ஜிவி மேல்நிலைப் பள்ளி மாணவி கவியரசி 496 மதிப்பெண்களும், மாணவி தக்க்ஷதா 494 மதிப்பெண்களும், மாணவி டிஷா 492 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

கணித பாடத்தில் 16 பேரும், அறிவியல் பாடத்தில் 5 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

490 மதிப்பெண்களுக்கு மேல் ஐந்து பேரும், 475-க்கு மேல் 20 பேரும், 450-க்கு மேல் 51 பேரும், 400-க்கு மேல் 17 பேரும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை பள்ளியின் தாளாளா் அன்பழகன், இயக்குநா்கள் பிச்சமுத்து, அமல்ராஜ், கருணாகரன் ஆகியோா் பாராட்டி வாழ்த்தி பரிசளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com