"பாடத் திட்டங்களை கடந்து தேடுதலில் ஈடுபட வேண்டும்

ஒவ்வொரு நாளும் மாற்றம் ஏற்பட்டு வரும் உலகில், பாடத்திட்டங்களை கடந்தும் மாணவர்கள் தேடுதலில் ஈடுபட வேண்டும் என டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை துணைத் தலைவர் கே. கணேசன் தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் மாற்றம் ஏற்பட்டு வரும் உலகில், பாடத்திட்டங்களை கடந்தும் மாணவர்கள் தேடுதலில் ஈடுபட வேண்டும் என டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை துணைத் தலைவர் கே. கணேசன் தெரிவித்தார்.

 திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியின் 25 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

 விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை துணைத் தலைவர் கே.கணேசன் பல்கலை. அளவில் தங்கப் பதக்கம் வென்ற 9 மாணவர்களுக்கும், பல்கலை. தரம் பெற்ற 169 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கினார்.

 அதைத் தொடர்ந்து, இளநிலை பட்டம் 692 பேருக்கும், முதுகலைப் பட்டம் 325 பேருக்கும் வழங்கப்பட்டது.

 முன்னதாக, அவர் பேசியது:

 மாணவர்கள் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களையும், தாங்கள் படிப்பதற்கு காரணமாக இருந்த பெற்றோர்களையும் என்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

 சவால்களும், சந்தர்ப்பங்களும் நிறைந்த எதிர்கால வாழ்க்கையில் வெற்றிக்கான முதல்படியை இன்று முதல் தொடங்க வேண்டும்.

 மாணவர்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

 கல்வி நிறுவனங்களில் கற்றுக் கொடுக்கப்படும் தொழில்நுட்பங்கள் அனைத்தும், நிகழ்காலத்தில் தொழில் கூடங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களுக்கு ஓர் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் உள்ளதாக இருக்கின்றன.

 பல்கலை. பாடத்திட்டங்கள் இந்த பிரச்னையை தீர்க்கும் வகையில் அமைக்கப்பட வில்லை. ஆனால், தொழில் நிறுவனங்கள் இந்த மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்க வில்லை. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு, அறிவுத்திறன் பெற்றுள்ள மாணவர்களை மட்டுமே தேர்வு செய்து வருகின்றன.

 அந்த வகையில் பாடத் திட்டத்தினைக் கடந்து, அனைத்து துறையிலும் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப முறைகளை கற்றுக் கொள்ளும் மாணவர்கள் மட்டுமே வேலைவாய்ப்புகளை பெற முடியும்.

   எதிர்வரும் 3 ஆண்டுகளில், தகவல் மேலாண்மை தொழில்நுட்பத் துறையில் சுமார் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புள்ளது என்றார்.

  நிகழ்ச்சியில் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி இயக்குநர்கள் ஆர்.எஸ்.கே. ரகுராம், ஆர்.எஸ்.கே. லட்சுமண பிரபு, ஆர்.எஸ்.கே. சுகுமாரன், முதல்வர் எஸ்.சக்திவேல், பதிவாளர் கே.என். சின்னக்காளை, நிர்வாக அலுவலர் குழந்தைவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com