"திரைப்படக் காட்சிகள் நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராது

திரைப்படங்களில் வரும் காட்சிகள், நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராது என மனநல மருத்துவர் கே.மகாலட்சுமி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

திரைப்படங்களில் வரும் காட்சிகள், நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராது என மனநல மருத்துவர் கே.மகாலட்சுமி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் தொடர்பான கருத்தரங்கம், திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய் அலுவலர் அ.மு.நாகேந்திரன் தலைமை வகித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தார். மதுவினால் ஏற்படும தீமைகள் குறித்து ஒருங்கிணைந்த குடிபோதை மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் க.ரத்தினம் பேசியது:

கஞ்சா பொருள்களை பயன்படுத்துவதில், தமிழக அளவில் திண்டுக்கல் மாவட்டம் 2-ஆவது இடத்தில் உள்ளது. மது அருந்துவதால், உடல் பருமன் அடையும், சோர்வு நீங்கும், உடல் நிறம் பெறும், சிந்தனை திறன் அதிகரிக்கும் என கூறுவதில் உண்மையில்லை. மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவரை, கட்டாயப்படுத்தியோ, துன்புறுத்தியோ மாற்ற முடியாது. மனோ தத்துவ நிபுணர் மூலம் சிகிச்சை அளித்தால் மட்டுமே நல்வழிப்படுத்த முடியும். என்றார்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் கே.மகாலட்சுமி பேசியது:

மது உள்ளிட்ட போதைப் பொருள்களைப் உபயோகிப்போருக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், சந்தேக புத்தியுடன், பிறரைக் குறைகூறும் பழக்கமும் ஏற்படுகிறது. மது மற்றும் புகையினால், பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால், நிஜ வாழ்க்கைக்கு சாத்தியமற்றது என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திடீரென குடியை நிறுத்தினால், உடலுக்கு பிரச்னை ஏற்படும் என சிலர் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். முறையான மருத்துவ சிகிச்சையும், குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் இருந்தால், குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும், என்றார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர்(கலால்) எஸ்.வி.குமார் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com