வாழும் கலை அமைப்பின் யோகா பயிற்சி

பழனி தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் வாழும் கலை அமைப்பு சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு செவ்வாய்க்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

பழனி தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் வாழும் கலை அமைப்பு சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு செவ்வாய்க்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
உலக யோகா தினத்தை முன்னிட்டு, பழனியில் வாழும் கலை அமைப்பு சார்பில் 7 நாள்களில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஏழு நாள்களும் பழனி கல்வி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவ, மாணவியர்க்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. செவ்வாய்க்கிழமை பழனியில் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் யோகா விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில், விரிப்புகளுடன் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு, வாழும் கலை அமைப்பின் மாநில நிர்வாகி சுப்புராஜ் தலைமை வகித்தார். பழனி வாழும் கலை அமைப்பின் நிர்வாகிகள் பொன்னம்பலம், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். யோகா ஆசிரியர் கோபிநாத் மாணவ, மாணவியர்க்கு செய்முறை பயிற்சி அளித்தார்.
இதில், மூச்சுப் பயிற்சி, தியானம், பல்வேறு நிலைகளிலான ஆசனங்கள் குறித்து அளிக்கப்பட்ட பயிற்சியை மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்ட யோகா ஸ்போர்ட்ஸ் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் என பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com